மருமகள் மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றி கொலை செய்த மாமியார் : அதிர்ச்சி சம்பவம்!
சென்னை, மாம்பலத்தைச் சேர்ந்தவர் சாகுல் அமீது. இவரது மனைவி ஷாகின். மனைவி ஷாகினுக்கும், தாய் தாஜ் நிஷாவுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்திருக்கிறது.
இந்நிலையில், கடந்த 2014ம் ஆண்டு நவம்பர் 26ம் தேதி ஷாகினுக்கும், அவரது மாமியாருக்கும் தகராறு ஏற்பட்டு பயங்கர சண்டையாக மாறியுள்ளது. இதில் ஆத்திரமடைந்த மாமியார் தாஜ் நிஷா, கொதிக்கும் எண்ணெயை எடுத்து ஷாகின் மீது ஊற்றி இருக்கிறார்.
இந்த சம்பவம் ஷாகின் படுகாயமடைந்தார். இவரின் அலறல் சத்தம் கேட்ட அக்கம், பக்கத்தினர் ஷாகினை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்தனர். ஆனால், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி ஷாகின் 2014ம் ஆண்டு டிசம்பர் 17ம் தேதி உயிரிழந்தார். இது குறித்து, கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த சென்னை அல்லிகுளம் மகளிர் சிறப்பு நீதிமன்ற நீதிபதி டி.எம்.முகமது பாருக், குற்றச்சாட்டுகள் ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டிருப்பதாக கூறி, தாஜ் நிஷாவுக்கு ஆயுள் தண்டனையும், 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்துள்ளார்.
குடும்ப தகராறில் மருமகள் மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றி கொலை செய்த வழக்கில் மாமியாருக்கு ஆயுள் தண்டனை விதித்து சென்னை மகளிர் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்திருப்பது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.