தூங்கிக் கொண்டிருந்த தந்தை, தாயையும் துடிக்க, துடிக்க கொலை செய்த மகன் - அதிர்ச்சி சம்பவம்

samugam-murder-father-mother
By Nandhini Dec 18, 2021 09:31 AM GMT
Report

பெற்றோர் தன்னை போதை மறுவாழ்வு மையத்துக்கு அனுப்பியதால் கோபமான மகன் தாய், தந்தையர் தூங்கும் போது கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தான் மாநிலம், ஹனுமங்கரில் உள்ள நோஹர் பகுதியில் வசிக்கும் தம்பதியரக்கு 16 வயதில் மகன் உள்ளார். இந்த மகன் எந்த நேரமும் குடிக்கு அடிமையானவர்.

இதனால், அவரை அந்த போதை பழக்கத்திலிருந்து மீட்டு கொண்டு வர தாயும், தந்தையும் போதை மறுவாழ்வு மையத்துக்கு மகனை அனுப்பி வைத்தனர். அங்கு சில நாட்கள் இருந்த அந்த மகன் கோபத்துடன் வெளியே வந்தான்.

கோபத்தில் வெளியே வந்த மகன், மீண்டும் பெற்றோர் திரும்பவும் அங்கேயே அனுப்பி விடுவார்களோ என்று எண்ணி தாயையும், தந்தையையும் கொலை செய்ய முடிவு செய்தான்.

இதனையடுத்து, சில நாட்கள் முன்பு இரவு தந்தையும், தாயும் தூங்கிக் கொண்டிருந்த போது, ஒரு கோடரி எடுத்து வந்து அவர்கள் இருவரையும், துடிக்க துடிக்க கொலை செய்துள்ளான்.

அப்போது தடுக்க வந்த அவரின் சகோதரரையும் தாக்கியுள்ளான். இதன் பிறகு, வீட்டை விட்டு வெளியே வந்த அவன், ஊர் மக்களிடம் தந்தையையும், தாயையும் கொலை செய்து விட்டதாக கூறியுள்ளான்.

இதை கேட்ட அக்கம், பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் கொடுத்து அவனை பிடித்து கொடுத்தனர். இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் அவனை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.