கள்ள காதலனோடு சேர்ந்து கணவருக்கு ஸ்லோ பாய்சன் கொடுத்து கொன்ற மனைவி - அதிர்ச்சி சம்பவம்

murder killed crime husband wife
By Nandhini Jan 25, 2022 10:29 AM GMT
Report

கள்ள காதலனோடு சேர்ந்து கணவனுக்கு ஸ்லோ பாய்சன் வைத்து கொன்ற மாணவியால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நாகை மாவட்டம், வேதாரண்யம் அடுத்த வேட்டைக்காரனிருப்பு, சடையன்காடு பகுதியை சேர்ந்தவர் தேவேந்திரன் (47).

இவர் அப்பகுதியில் கவுன்சிலராக உள்ளார். இவர் சூர்யா என்ற ஏழை வீட்டு பெண்ணை அவர் வீட்டின் ஏழ்மையை பயன்படுத்தி தேவேந்திரனின் வீட்டார் கட்டாய திருமணம் செய்து வைத்திருக்கிறார்கள்.

இதனையடுத்து, தேவேந்திரன் வீட்டில் வேலைக்கு சேர்ந்த சந்திரசேகரனுக்கும், சூர்யாவுக்கும் இடையே நட்பு ஏற்பட்டது. இந்த நட்பு நாளடைவில் காதலாக மாறியது. இது ஒரு கட்டத்தில் தேவேந்திரனுக்கு இந்த விஷயம் தெரியவந்தது.

இதனையடுத்து, இருவரையும் தேவேந்திரன் கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த இரண்டு பேரும் தேவேந்திரனை தீர்த்துக்கட்ட முடிவு செய்துள்ளனர். உடனே கொலை செய்து விட்டால் வெளியே தெரிந்துவிடும் என்பதால், தேவேந்திரன் சாப்பிடும்போது, சாம்பாரில் அவ்வப்போது விஷத்தை கலந்து கொடுத்து உடலில் சிறிது சிறிதாக பாதிக்கப்பட்டு இறப்பு ஏற்படும் வகையில் விஷம் கொடுத்திருக்கிறார்கள்.

இதனால் தேவேந்திரனுக்கு மஞ்சள் காமாலை, கல்லீரல் பிரச்சினை ஏற்பட்டு திருச்சியில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி தேவேந்திரன் உயிரிழந்தார்.

இதனையடுத்து, தேவேந்திரன் உடலை அவசர அவசரமாக தகனம் செய்ததும், உறவினர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இது குறித்து இறந்தவரின் சகோதரர் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். இது தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து இருவரையும் கைது செய்துள்ளனர். 

கள்ள காதலனோடு சேர்ந்து கணவருக்கு ஸ்லோ பாய்சன் கொடுத்து கொன்ற மனைவி - அதிர்ச்சி சம்பவம் | Samugam Murder Crime Wife Killed Husband