ஓட ஓட விரட்டி கொடூரமாக குத்திகொலை செய்த மர்மகும்பல் - அண்ணனால் தம்பிக்கு நடந்த கொடூரம் - அதிர்ச்சி சம்பவம்
அண்ணன் கள்ள உறவு வைத்திருந்த விவகாரத்தில் தம்பி ஓட ஓட விரட்டி படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டத்தில் இச்சம்பவம் நடந்திருக்கிறது. மயிலாடுதுறையைச் சேர்ந்தவர் சதீஷ். இவர் ஜேசிபி ஆப்பரேட்டராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு திருமணமாகி 3 குழந்தைகள் இருக்கிறார்கள்.
நேற்று மாலையில் சீனிவாசபுரம் பகுதியில் நின்று நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தார் சதீஷ். அப்போது, இருசக்கர வாகனங்களில் வந்த மர்ம நபர்கள் சதீஷிடம் வேண்டுமென்றே பேச்சு கொடுத்து வம்பிழுத்தனர். உடனே, அந்த மர்ம நபர்கள் சதீஷை அடிக்க ஆரம்பித்தனர்.
அவர்கள் கொலை செய்யும் நோக்கில் அடிப்பதை உணர்ந்த சதீஷ் அவர்களிடமிருந்து தப்பிக்க வயல்வெளியில் விழுந்து ஓடினார். ஆனால், அவரை விடாமல் துரத்தி சென்று, ஓட ஓட விரட்டி கத்தியால் குத்தி படுகொலை செய்தது அந்த மர்மகும்பல். இது குறித்து போலீசாருக்கு அப்பகுதியில் உள்ளவர்கள் தகவல் கொடுத்தனர். இந்த தகவல் கிடைத்தவுடன் உடனடியாக சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து சென்றனர்.
சதீஷின் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்கு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் . இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் இது தொடர்பாக விசாரணை நடத்தினர்.
அப்போது, முன்விரோதம் காரணமாக இந்த படுகொலை நிகழ்ந்தது தெரியவந்துள்ளது. சதீஷின் அண்ணன் வினோத், பண்டாரவாடை கிராமத்தைச் சேர்ந்த பழனிவேல் என்பவரின் மனைவி இடையே கள்ள உறவு வைத்ததாக சொல்லப்படுகிறது.
இதனால் இரு தரப்புக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்த விவகாரத்தில் தான் சதீஷின் வீண் வம்பிழுத்து, ஓட ஓட விரட்டி அவரை குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார். இந்தக் கொலை சம்பவத்தில் பழனிவேல், அவரது மருமகன் இருவரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.