லக்கிம்பூர் விவசாயிகள் கொலை வழக்கு - கைதான அமைச்சர் மகன் திடீரென மருத்துவமனையில் அனுமதி
லக்கிம்பூர் கெரி-விவசாயிகளை கார் ஏற்றி கொலை செய்த வழக்கில் மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா கைது செய்யப்பட்டுள்ளார்.
உத்தர பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ., ஆட்சி நடைபெற்று வருகிறது. இங்குள்ள லக்கிம்பூர் கெரி என்ற இடத்தில் சமீபத்தில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
அப்போது, மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா, விவசாயிகள் மீது காரை ஏற்றியதாக சொல்லப்படுகிறது. இச்சம்பவத்தில் 4 விவசாயிகள் உட்பட 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இது குறித்து, ஆஷிஷ் மிஸ்ரா உட்பட 13 பேர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். இந்நிலையில், ஆஷிஷ் மிஸ்ராவுக்கு டெங்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து, அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.