காதலியின் கண் முன்னே காதலனை அடித்துக் கொன்ற பெற்றோர் - சினிமாவையே மிஞ்சும் அதிர்ச்சி சம்பவம்

samugam-murder
By Nandhini Oct 24, 2021 04:41 AM GMT
Report

காதலியின் கண் முன்னே காதலனை பெண்ணின் பெற்றோர் அடித்துக் கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்தவர் ரவி (32). இவர் அதே கிராமத்தைச் சேர்ந்த ஒரு இளம் பெண்ணை 3 வருடங்களாக காதலித்து வந்துள்ளார். இவர்கள் இருவரும் அடிக்கடி வெளியில் சென்று வந்துள்ளனர். இந்த விஷயம் பெண்ணின் வீட்டிற்கு தெரிய வந்துள்ளது.

ரவி வேறு மதத்தைச் சேர்ந்தவர். இதனால், பெண்ணின் பெற்றோர்கள் இவர்களின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ரவியை அழைத்து என் மகளுடன் இனி நீ பேசவோ, பழகவோ கூடாது என்று எச்சரித்துள்ளனர்.

ஆனால், ரவி காதலியுடன் தொடர்ந்து பேசி வந்துள்ளார். இதனால், ஆத்திரமடைந்த பெண்ணின் பெற்றோர் ரவியை தீர்த்துக் கட்டினால்தான் பிரச்சனை தீரும் என்று நினைத்தனர். இதனையடுத்து, ரவியிடம் செல்போனில் பேசி திருமண விஷயமாக பேச வேண்டும் வீட்டுக்கு வா என்று அழைத்துள்ளனர். அதை உண்மை என்று நம்பி ரவியும் காதலியும் வீட்டிற்கு சென்றார்.

காதலியின் கண் முன்னே, பெண்ணின் தாய், தந்தை உள்ளிட்ட 8 பேர் சேர்ந்து ரவியை சரமாரியாக அடித்து உதைத்தனர். இதில் தலையில் பலத்த காயம் அடைந்து ரத்தம் சொட்ட செட்ட கீழே சரிந்து ரவி உயிரிழந்தார். தன் கண் முன்னே காதலன் கொலை செய்யப்பட்டதை கண்டு காதலி கதறி அழுதுள்ளார். இது தொடர்பாக காதலி அலமேலா காவல் நிலையத்திற்கு போன் செய்து ரவி கொலை செய்யப்பட்ட தகவலை கூறினார். இதனையடுத்து, ரவியின் குடும்பத்திற்கும் அப்பெண் விபரத்தை கூறினார்.

போலீஸ் வருவதற்குள் ரவியின் உடலை ஊருக்கு ஒதுக்குப்புறமாய் சென்று தூக்கி வீசிவிட்டு பெண் குடும்பத்தினர் தலைமறைவாகிவிட்டனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் ரவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், தலைமறைவாக இருக்கும் காதலின் குடும்பத்தினரை தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பும், சோகமும் ஏற்பட்டுள்ளது.  

காதலியின் கண் முன்னே காதலனை அடித்துக் கொன்ற பெற்றோர் - சினிமாவையே மிஞ்சும் அதிர்ச்சி சம்பவம் | Samugam Murder