ஆன்லைன் விளையாட்டு மோகம் - வீட்டில் உள்ள பணம், நகைகளை திருடிச் சென்ற 15 வயது சிறுவன்

samugam-money-robbery
By Nandhini Nov 21, 2021 07:50 AM GMT
Report

ஆன்லைன் விளையாட்டு மோகத்தால் வீட்டிலிருந்த பணம் மற்றும் நகையுடன் 15 வயது சிறுவன் நேபாளத்திற்கு தப்ப முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை, பழைய வண்ணாரப்பேட்டையை சேர்ந்த 15 வயது சிறுவன், ஆன்லைன் மூலம் விளையாட்டை விளையாடி வந்துள்ளான். நாளடைவில் அந்த விளையாட்டிற்கு அவன் அடிமையாகியுள்ளான்.

எந்நேரமும் ஆன்லைன் விளையட்டிலேயே மூழ்கி இருந்து வந்துள்ளான். இதை கவனித்த பெற்றோர்கள் அச்சிறுவனை தட்டிக் கேட்டு கண்டித்து வந்துள்ளனர். இதனால், விரக்தி அடைந்த அச்சிறுவன், வீட்டிலிருந்த 213 சவரன் நகை, ரூ. 33 லட்சத்தை எடுத்துக்கொண்டு நேபாளத்திற்கு செல்ல திட்டமிட்டு தாம்பரத்தில் உள்ள விடுதியில் தங்கி இருக்கிறான்.

மகன் காணாமல் போனதால் பெற்றோர்கள் காவல்துறையில் புகார் கொடுத்துள்ளனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து, தனிப்படை அமைத்து தேடி வந்தனர். அச்சிறுவனின் செல்போன் எண்ணை வைத்து சிறுவன் இருக்கும் இருப்பிடத்தை போலீசார் கண்டுபிடித்தனர்.

அப்போது அச்சிறுவனிடம் போலீசார் விசாரணை நடத்தினார். அப்போது விசாரணையில் அச்சிறுவன், ஆன்லைன் விளையாட்டுக்கு இந்தியாவில் தடை விதிக்கப்பட்டதால், நேபாளத்திற்கு தப்பிச் செல்லலாம் என்று பணத்துடன் வந்ததாக கூறியுள்ளான் அச்சிறுவன்.

ஆன்லைன் விளையாட்டு மோகம் - வீட்டில் உள்ள பணம், நகைகளை திருடிச் சென்ற 15 வயது சிறுவன் | Samugam Money Robbery