நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி : இந்தியா டாஸ் வென்று பேட்டிங் தேர்வு
நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்றுள்ள இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்திருக்கிறது. நியூசிலாந்து கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது.
இந்நிலையில், நியூசிலாந்து அணி விளையாடி வரும் 20 ஓவர் தொடரை 0-3 என்ற கணக்கில் தோல்வி அடைந்தது. இதனையடுத்து, 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்க இருக்கிறது.
இதன்படி இந்தியா-நியூசிலாந்து இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள கிரீன் பார்க் ஸ்டேடியத்தில் தொடங்கி இருக்கிறது. டாஸ் வென்றுள்ள இந்த போட்டிக்கான இந்திய அணியின் கேப்டனான ரஹானே முதலில் பேட்டிங்கை தேர்வு செய்திருக்கிறார். இப்போட்டிக்கான இந்திய அணியில் ஷ்ரேயஸ் ஐயர் அறிமுக வீரராக சேர்க்கப்பட்டிருக்கிறார்.