8 ஆண்டுகளாக காதல்... திருமணம் செய்த ஓரின சேர்க்கையாளர்கள் - வைரலாகும் புகைப்படம்
இந்தியாவில் ஒரே பாலினத்தை சேர்ந்தவர்கள் திருமணம் செய்துக் கொள்ள முடியாது என்பதால், இந்த இரு ஓரின சேர்க்கை ஆண்களும் தங்களின் 8 ஆண்டு கால உறவை அதிகாரப்பூர்வமாக்க வெளிப்படுத்தும் 'நம்பிக்கை தரும் விழாவாக' நடத்தியுள்ளனர்.
34 வயதான அபய் டாங்கே மற்றும் 31 வயதான சுப்ரியோ சக்ரவர்த்தி என்ற இரு ஆண்களும் கடந்த டிசம்பர் 18ம் தேதி ஹைதராபாத் புறநகரில் உள்ள ஒரு ரிசார்ட்டில் நடந்த ஒரு தனியார் விழாவில் மோதிரங்கள் மாற்றி ஒன்றாக வாழும் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.
இந்தத் திருமணத்தில், குடும்ப உறுப்பினர்கள் மற்றும் தம்பதியினரின் நெருங்கிய நண்பர்கள் என மொத்தம் 60 பேர் மட்டும் கலந்து கொண்டனர். பெங்காலி மற்றும் பஞ்சாபி பாரம்பரியத்துடன் இந்த இரு மனங்கள் ஒன்றிணையும் திருமண விழா நடந்தது.
கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக சடங்கு சம்பிரதாயங்களும் நடைபெற்றன. டோலிவுட் நடிகை சமந்தா ரூத் பிரபு ஓரின சேர்க்கை திருமணத்தை ஆதரித்து டுவிட்டரில் தம்பதிக்கு வாழ்த்து தெரிவித்தார்.
இந்த இருவரின் பெற்றோரும், குடும்பத்தினரும் ஆரம்பத்தில் திருமணம் செய்வதற்கு ஆதரவளிக்கவில்லை, ஆனால் பின்னர் அவர்களது உறவை ஏற்றுக்கொண்டுள்ளனர்.
தற்போது, சுப்ரியோ மற்றும் அபய் திருமணம் சட்டப்பூர்வ அங்கீகாரம் பெறவில்ல என்றாலும், வழக்கமான திருமணத்திற்கு பதிலாக, வித்தியாசமான ஜோடிகள், சட்டப்பூர்வமாக திருமணம் செய்து கொள்ள அனுமதிக்கப்பட்டவுடன், தங்கள் திருமணத்தை பதிவு செய்ய திட்டமிட்டுள்ளதாக இந்த புதுமணத் தம்பதிகள் கூறுகின்றனர்.