தீபாவளி பண்டிகையால் விலை அதிகரித்த மதுரை மல்லி - கிலோ ரூ.2000க்கு விற்பனை
samugam-madurai-coriander
By Nandhini
தீபாவளி பண்டிகையையொட்டி மதுரை மாட்டுத்தாவணி மலர் சந்தையில் மல்லிப்பூ கிலோ 2000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. நாளை நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது.
இந்நிலையில், கடந்த வாரம் கிலோ 800 ரூபாய்க்கு விற்கப்பட்ட மல்லிப்பூ, மதுரை மாட்டுத்தாவணி மலர் சந்தையில் தற்போது கிலோ 2000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகின்றது. பண்டிகை காலம் என்றாலே பூக்களின் விலை அதிகரிக்கும். ஆனால், தற்போது மழை அதிகமாக பெய்து வருவதால், பூக்களின் வரத்து குறைந்துள்ளது.
இதனால், இவ்வளவு விலை உயர்வு என்று வியாபாரிகள் கூறுகின்றனர். வழக்கமாக 5 டன் மல்லிகை பூ சந்தைக்கு வரும் நிலையில், தற்போது 1 டன் மல்லிகை பூ மட்டுமே வந்துள்ளதாக சொல்லப்படுகிறது.