கோவை மாணவி தற்கொலை - அடையாளப்படுத்திய 48 'யூடியூப் சேனல்'கள் மீது வழக்கு?

samugam-kovai-student-death
By Nandhini Nov 17, 2021 05:21 AM GMT
Report

கோவையில், பாலியல் துன்புறுத்ததால் தற்கொலை செய்து கொண்ட பள்ளி மாணவியின் அடையாளத்தை வெளியிட்டதாக 48 யூடியூப் சேனல்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதாக வெளியான தகவலை போலீசார் மறுத்திருக்கிறார்கள்.

கோவையில் தனியார் பள்ளியில் படித்து வந்த 17 வயது மாணவிக்கு பள்ளியின் ஆசிரியர் மிதுன் சக்ரவர்த்தி பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால், அப்பள்ளியிலிருந்து விலகிய மாணவி வேறு பள்ளியில் சேர்ந்தார்.

இந்நிலையில், மாணவி திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். போலீசார் மிதுன் சக்ரவர்த்தி மற்றும் பள்ளி முதல்வர் மீரா ஜாக்சனை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

இந்நிலையில், மாணவியில் அடையாளங்களை 48 யூடியூப் சேனல்கள் தெரிகிறது. இதனையடுத்து, அந்த 48 யூடியூப் சேனல்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியானது. ஆனால், இதை போலீஸ் அதிகாரிகள் மறுத்திருக்கிறார்கள். 

கோவை மாணவி தற்கொலை - அடையாளப்படுத்திய 48