‘இந்தி மொழிதான் தேசிய மொழி...’ - கேஎஃப்சி ஊழியரால் வலுக்கும் எதிர்ப்பு

samugam-kfg-worker
By Nandhini Oct 27, 2021 09:48 AM GMT
Report

கர்நாடகா மாநிலத்தில் உள்ள கேஎஃப்சி விற்பனை மையத்தில் பணியாற்றும் ஊழியர் ஒருவர் இந்தியாவின் தேசிய மொழி இந்தி என்று கூறியதற்கு சமூகவலைத்தளங்களில் கண்டனங்கள் வலுத்து வருகின்றன.

பெங்களூருவில் உள்ள கேஎஃப்சி விற்பனை மையத்தில் இந்தி பாடல் ஒன்று ஒலிபரப்பபட்டதாக கூறப்படுகிறது. அப்போது அங்கிருந்த பெண் வாடிக்கையாளர் ஒருவர் கன்னட பாடலை ஒலிபரப்புமாறு கேட்டார். அதற்கு மறுப்பு தெரிவித்த அந்த உணவகத்தின் ஊழியர் ஒருவர், இந்தியாவின் தேசிய மொழி இந்தி என்று அந்த பெண்ணிடம் பதில் கூறியுள்ளார்.

அப்போது இரு தரப்பினரும் இடையே வாக்குவாதம் முற்றியது. அந்த உரையாடலில் வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியானது. இதற்கு, கன்னட மக்கள் தங்களது கண்டன குரல்களை ஒலிக்கத் தொடங்கியிருக்கிறார்கள். #boycotKFC, #Rejectkfc ஆகிய ஹேஷ்டேக்கும் தற்போது சமூகவலைத்தளத்தில் டிரெண்டிங்க் ஆகி வருகிறது.

அண்மையில் சொமோட்டோவின் வாடிக்கையாளர் சேவை மைய முகவர் ஒருவர், அனைவரும் இந்தி கற்றுக் கொள்ள வேண்டும் என்று தமிழ்நாட்டை சேர்ந்த வாடிக்கையாளரிடம் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில், தற்போது கர்நாடகாவிலும் அது போன்ற சம்பவம் ஒன்று நிகழ்ந்திருக்கிறது.

அதற்கு விளக்கமளித்துள்ள கேஎஃப்சி, சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டு வருவது பழைய காணொலி என்றும், கேஎஃப்சியானது அனைத்து கலாசாரத்தின் மீதும் உயரிய மரியாதையை கொண்டிருக்கிறது என்று விளக்கம் தெரிவித்திருக்கிறது. 

‘இந்தி மொழிதான் தேசிய மொழி...’ - கேஎஃப்சி ஊழியரால் வலுக்கும் எதிர்ப்பு | Samugam Kfg Worker