வேலூர் பிரபல நகைக் கடையில் கொள்ளை : சுடுக்காட்டில் புதைக்கப்பட்ட நகைகள் மீட்பு

Theft samugam-jewelry-store
By Nandhini Dec 21, 2021 05:33 AM GMT
Report

வேலூரில் பிரபல நகைக் கடையில் கொள்ளையடிக்கப்பட்டு சுடுகாட்டில் புதைக்கப்பட்டிருந்த நகைகளை தற்போது போலீசார் மீட்டுள்ளனர்.

கடந்த 15ம் தேதி வேலூரில் உள்ள பிரபல நகைக்கடை சுவரில் நள்ளிரவில் துளையிட்டு 16 கிலோ தங்க நகைகளை முகமூடி அணிந்த நபர் திருடிச் சென்றனர். இது குறித்து, போலீசார் வழக்குப் பதிவு, இது தொடர்பாக 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த கொள்ளையை அங்கிருந்த சிசிடிவி காட்சிகளின் மூலம், நகைகளை கொள்ளையடித்தது வேலூர் மாவட்டம், ஒடுக்கத்தூர் அடுத்த குச்சிபாளையம் பகுதியைச் சேர்ந்த டீக்கா ராமன் என்பது தெரிய வந்தது.

சிவ பக்தரான டீக்கா ராமன், நகைக் கடையில் முதலில் தங்கத்தினால் ஆன ருத்ராட்சத்தை திருடி அணிந்து கொண்டு பிறகு மற்ற நகைகளை கொள்ளையடித்தது போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

கொள்ளையடிக்கப்பட்ட நகைகளை ஒடுக்கத்தூர் பகுதியில் உள்ள ஒரு சுடுகாட்டில் புதைத்து வைத்திருப்பதாக டீக்கா ராமன் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

இதனையடுத்து, மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ராஜேஷ்கண்ணா தலைமையில் போலீசார் சுடுகாட்டிற்குச் சென்று அங்கு புதைத்து வைக்கப்பட்டிருந்த 16 கிலோ நகைகளை மீட்டுள்ளனர். 

வேலூர் பிரபல நகைக் கடையில் கொள்ளை : சுடுக்காட்டில் புதைக்கப்பட்ட நகைகள் மீட்பு | Samugam Jewelry Store Theft