‘டி-20’ உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி - பாகிஸ்தான் வெற்றியை கொண்டாடிய ராஜஸ்தான் ஆசிரியை கைது

samugam-india-teacher-arrest
By Nandhini Oct 28, 2021 05:26 AM GMT
Report

 'டி-20' உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில், இந்தியாவை பாகிஸ்தான் வென்றது. இதனையடுத்து, பாகிஸ்தான் வெற்றி பெற்றதை கொண்டாடிய, ராஜஸ்தான் ஆசிரியை போலீசாரால் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்று வருகின்றது. இதில், சமீபத்தில் நடைபெற்ற போட்டியில் இந்தியாவை பாகிஸ்தான் தோற்கடித்தது.

இப்போட்டியில் பாகிஸ்தான் வென்றதைக் கொண்டாடும் வகையில், ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரைச் சேர்ந்த பள்ளி ஆசிரியை நபீசா அட்டாரி சமூக வலைதளத்தில் செய்தியை வெளியிட்டார். இது பெரும் சர்ச்சையை உருவெடுத்தது.

இதைத் தொடர்ந்து அவர் பணி நீக்கம் செய்து பள்ளி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டது. இந்நிலையில், தேச ஒற்றுமைக்கு எதிராக செயல்பட்டதாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதையடுத்து போலீசார் அவரை கைது செய்துள்ளனர்.

அதேபோல், உத்தர பிரதேச மாநிலம் ஆக்ராவில் உள்ள பல்கலையில் படிக்கும் ஜம்மு - காஷ்மீரைச் சேர்ந்த 3 மாணவர்களும், பாகிஸ்தான் வெற்றியைக் கொண்டாடினார்கள். அதனையடுத்து, அவர்கள் 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், அவர்கள் மீது ஆக்ரா போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

‘டி-20’ உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி - பாகிஸ்தான் வெற்றியை கொண்டாடிய ராஜஸ்தான் ஆசிரியை கைது | Samugam India Teacher Arrest