சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் : பிரபல சீரியல் நடிகர் மீது போக்சோ சட்டம் பாய்ந்தது!

samugam-india
By Nandhini Jun 05, 2021 11:00 AM GMT
Report

சிறுமியை பாலியல் கொடுமை செய்ததாக சீரியல் நடிகர் பேர்ல் வி புரி போக்சோ சட்டத்தின் கீழ் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்தியில் மிகவும் பிரலபலான தொடர் ‘நாகின்’ சீரியல்.

இந்தியா முழுக்க இந்த தொடர் சூப்பர் ஹிட்டானது. இதனையடுத்து, தமிழிலும் ‘நாகினி’ டப்பிங் செய்யப்பட்டு ஒளிபரப்பப்பட்டது. தமிழிலும் ‘நாகினி’ ஹிட் அடித்ததால் ‘நாகினி 2’, ‘நாகினி 3’ என அடுத்தடுத்த டப்பிங் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது.

தற்போது ஒளிபரப்பாகி ஓடிக்கொண்டிருக்கும் ‘நாகினி 3’ சீரியலில் ஹீரோவாக பேர்ல் வி புரி நடித்து வருகிறார். தன்னிடம் பழகுவது பாம்பு என்று தெரியாமல் பாம்பை திருமணம் செய்துகொள்ளும் அப்பாவியாய் நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்தார்.

இந்தியில் ‘நாகின் 3’ மட்டுமல்லாமல் நிறைய சீரியல்களில் நடித்துள்ளார். இந்நிலையில், பேர்ல் வி புரி மீது 17 வயது சிறுமி ஒருவர் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக போலீசில் இவர் மீது புகார் கொடுத்தார்.

சீரியலில் நடிக்க வாய்ப்பு வாங்கித் தருவாதாகக் கூறி சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்ததாக அந்தசி சிறுமி குற்றம்சாட்டியுள்ளார்.

சிறுமி கொடுத்த புகாரை பதிவு செய்த போலீசார், நேற்றிரவு போலீசார் பேர்ல் வி புரி உட்பட அவருடைய நண்பர்கள் 5 பேரை கைது செய்துள்ளனர். பாலியல் வன்புணர்வு மற்றும் பாலியல் வன்கொடுமை என இரண்டு வழக்குகள் பதிவு, போக்சோ சட்டத்தின் கீழ் சிறையில் போலீசார் அடைத்துள்ளனர். 

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் : பிரபல சீரியல் நடிகர் மீது போக்சோ சட்டம் பாய்ந்தது! | Samugam India