கணவன் மீது கொதிக்க கொதிக்க வெந்நீரை ஊற்றிய மனைவி : அதிர்ச்சி சம்பவம்

samugam-husband-wife-fight
By Nandhini Oct 27, 2021 03:21 AM GMT
Report

கணவன் மீது வெந்நீரை ஊற்றிய மனைவியை போலீசார் கைது செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்தவர் இனிகோ.

இவரது மனைவி மரிய வினோ. இவர்களுக்கு 13 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்நிலையில் கணவன் பெயரில் உள்ள வீட்டை தனது பெயருக்கு மாற்றி எழுதி தருமாறு மரிய வினோ வற்புறுத்தி வந்திருக்கிறார்.

இதனால் கணவன் மனைவி இருவருக்குள்ளும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்நிலையில், வீட்டின் பெயரை மாற்றும் தகராறில் கணவன் மீது மரிய வினோ வெந்நீரை கொதிக்கக் கொதிக்க எடுத்து ஊற்றி இருக்கிறார். இதில் இனிகோவின் உடல் வெந்து போய் துடிதுடித்தார். இவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து இனிகோவை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.

இது குறித்து காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இனிகோவின் கண்களில் மிளகாய்ப் பொடி தூவி மனைவி சித்ரவதை செய்து கொலை செய்ய முயற்சி செய்தது தெரியவந்தது. இதனையடுத்து, மரிய வினோவை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.   

கணவன் மீது கொதிக்க கொதிக்க வெந்நீரை ஊற்றிய மனைவி : அதிர்ச்சி சம்பவம் | Samugam Husband Wife Fight