"உலகிலேயே இந்த ஹெலிகாப்டர் தான் அதிநவீனமானது...." - விபத்துக்குள்ளான MI-17 V5 குறித்து வெளிவந்த தகவல்
இந்திய ராணுவத்தின் தலைவரும், இந்திய ராணுவ தலைமை தளபதியான பிபின் ராவத், தன்னுடைய மனைவியுடன் இன்று நீலகிரியிலுள்ள வெலிங்டன் ராணுவ கல்லூரிக்குச் செல்ல திட்டமிட்டார்.
இதனையடுத்து, அவருடன் பாதுகாப்பு கமாண்டோக்கள், விமான ஓட்டிகள் உள்ளிட்ட அதிகாரிகள் என மொத்தமாக 14 பேர் இந்த ஹெலிகாப்டரில் பயணம் செய்தனர். ஆனால், இந்த ஹெலிகாப்டர் நீலகிரியில் கீழே விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
பனிமூட்டம் காரணமாக இந்த விபத்து நடந்ததாக தகவல்கள் கூறப்படுகிறது. சுமார் 1 மணி நேரம் இந்த ஹெலிகாப்டர் கொளுந்து விட்டு எரிந்துக் கொண்டிருந்தது. இந்த விபத்தி 11 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலியல், விபத்துக்குள்ளான ஹெலிகாப்டரின் விபரங்கள் தற்போது வெளியாகி உள்ளது.
இந்த விபரங்கள் அதிர்ச்சியையும், சந்தேகத்தையும் தற்போது எழுப்பி இருக்கிறது. இந்த ஹெலிகாப்டர் MI-17V5 ரகத்தைச் சேர்ந்ததாகும். ரஷ்ய நிறுவனமான கசன் ஹெலிகாப்டர்ஸிடமிருந்து இந்தியா இதனை வாங்கி இருக்கிறது. இது ராணுவ ஆயுதங்கள், வீரர்களை ஏற்றிச்செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. உலகில் இருக்கும் அதிநவீன ஹெலிகாப்டர்களில் இது ஒன்றாகும்.
இதனை தீயணைப்புப்பணி, பாதுகாப்புப் பணி, கண்காணிப்பு, மீட்புப்பணி ஆகியவற்றுக்கும் பயன்படுத்த முடியும். கடுமையான மழை பெய்யும் பகுதி, கடற்பகுதி, பாலைவனம் ஆகியவற்றிலும் இந்த ரக ஹெலிகாப்டர்கள் சிறப்பாக பறக்கும் தன்மை கொண்டவை. கதவுகளை இழுவை மூலம் திறப்பது போன்று வடிவமைக்கப்பட்டிருக்கிறது.
பாராசூட் உபகரணங்கள், தேடுதல் விளக்குகள், எப்எல்ஐஆர் சிஸ்டம், எமர்ஜெனிஸ் ப்ளோட்டிங் சிஸ்டம் இருக்கின்றன. 36 ராணுவ வீரர்கள், 4.50 டன் பொருட்களை சுமந்து செல்லும் திறன் கொண்டவை. இந்த ஹெலிகாப்டரில் ஷட்டர்ன் வி ரக துப்பாக்கிகள், எஸ்-8 ரக ராக்கெட்டுகள், 23எம்எம் எந்திர துப்பாக்கிகள், பிகேடி எந்திர துப்பாக்கி, ஏகேஎம் எந்திரதுப்பாக்கி மூலம் எதிரிகளை சுட முடியும். எதிரிகளின் இருப்பிடத்தை ராக்கெட் வீசி அழிப்பதற்கும், வாகனங்களை அழிப்பதற்கும், எதிரிகளை குறி வைத்து தாக்குவதற்கும், இந்த ஹெலிகாப்டர் மூலம் செய்து கொள்ளலாம்.
இந்த ஹெலிகாப்டரில் ஃபோம் பாலியுரேதேன் எனும் வேதிப்பொருள் எரிபொருள் டேங்கில் நிரப்பப்பட்டுள்ளது. இது ஹெலிகாப்டர் வெடித்துச் சிதறும்போது, பெரிய விபத்து ஏற்படாமல் தடுத்துவிடும்.
இது மணிக்கு அதிகபட்சமாக 250 கி.மீ வேகத்திலும், சராசரியாக 580 கி.மீ தொலைவும், அதிகபட்சமாக 1,065 கி.மீ தொலைவையும் எரிபொருள் மூலம் கடக்க முடியுமாம். அதிகபட்சமாக 6 ஆயிரம் மீட்டர் உயரம் வரை பறக்க இந்த ஹெலிகாப்டரால் முடியும்.