ராணுவ ஹெலிகாப்டர் விபத்து – முதல் தகவல் கொடுத்தவர்களுக்கு பரிசு

samugam-helicopter-crash-price
By Nandhini Dec 13, 2021 11:00 AM GMT
Report

ஹெலிகாப்டர் விபத்து குறித்து தகவல் தந்த 2 பேருக்கு தலா ரூ.5,000 பரிசளித்தார் லெப்டினண்ட் ஜெனரல் அருண்.

குன்னூர் ஹெலிகாப்டர் விபத்து குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவித்த 2 பேருக்கு தலா ரூ.5,000 பரிசளித்தார் தென்பிராந்திய லெப்டினண்ட் ஜெனரல் ஏ.அருண். இந்த விபத்து குறித்து தகவல் அளித்த கிருஷ்ணசாமி மற்றும் குமார் ஆகியோருக்கு தலா 5 ஆயிரம் ரூபாய் வழங்கி பாராட்டியுள்ளார்.

மேலும், ஹெலிகாப்டர் விபத்தின்போது உதவிய நஞ்சப்பத்திரம் மக்களுக்கு நேரில் நன்றி தெரிவித்தார். கடந்த 8ம் தேதி குன்னூர் அருகே ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் நாட்டின் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி 13 பேர் உயிரிழந்தார்கள்.

குரூப் கேப்டன் வருண் சிங் மட்டும் 80 சதவீத தீக்காயத்துடன் மீட்கப்பட்டு பெங்களூரு விமானப்படை மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.