1½ கிராம் தங்கத்தில் ஜெயலலிதா உருவ படம் - ஆம்பூர் நகை தொழிலாளி அசத்தல் படைப்பு

gold samugam- Jayalalithaa portrait
By Nandhini Dec 05, 2021 05:46 AM GMT
Report

ஆம்பூர் ‌ஷராப் பஜாரை சேர்ந்தவர் தேவன் (55). இவர் தங்க நகை சிற்பி. இவர் வங்கியில் நகை மதிப்பீட்டாளராக பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில், முன்னாள் முதலமைச்சரும், அ.தி.மு.க. பொதுச் செயலாளருமான ஜெயலலிதாவின் 5-வது நினைவு நாளையொட்டி கடந்த 3 நாட்களாக வேலை செய்து 1½ கிராம் தங்கத்தில் ஜெயலலிதா முழு உருவ படத்தை செதுக்கி இருக்கிறார்.

இதன் மதிப்பு ரூ.5 ஆயிரமாகும். இவர் ஏற்கனவே அண்ணா, எம்.ஜி.ஆர், கருணாநிதி, அப்துல் கலாம், கிரிக்கெட் உலக கோப்பை மற்றும் அனைத்து மதப் பண்டிகைகளின் சின்னங்களை தங்கத்தால் செதுக்கி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

1½ கிராம் தங்கத்தில் ஜெயலலிதா உருவ படம் - ஆம்பூர் நகை தொழிலாளி அசத்தல் படைப்பு | Samugam Gold Jayalalithaa Portrait