காந்தி தான் சாவர்க்கரிடம் கருணை மனுவை தாக்கல் செய்யும்படி சொன்னார் - ராஜ்நாத் சிங்

By Nandhini Oct 13, 2021 07:28 AM GMT
Report

மகாத்மா காந்தி தான் சாவர்க்கரிடம் கருணை மனுவை தாக்கல் செய்யும் படி கூறினார் என்று மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்திருக்கிறார். சாவர்க்கர் தொடர்பான புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த விழா நிகழ்ச்சியில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்து கொண்டார்.

அப்போது அவர் பேசியதாவது -

'மகாத்மா காந்தியின் வேண்டுகோளின் பேரில் தான் பிரிட்டிஷ்காரர்களுக்கு சாவர்க்கர் கருணை மனு எழுதினார்கள். மார்க்சிஸ்ட் மற்றும் லெனினின் சித்தாந்தத்தைச் சேர்ந்தவர்கள் சாவர்க்கரை பாசிஸ்ட் என்று தவறாக சித்தரித்து வருகிறார்கள். சாவர்க்கரை தேசியத்தின் அடையாளம். வலுவான பாதுகாப்பு மற்றும் இராஜதந்திர கோட்பாட்டை நாட்டுக்கு வகுத்து கொடுத்தவர் சாவர்க்கர். அவர் இந்திய வரலாற்றின் அடையாளமாக என்றென்றும் நினைவுக்கூறப்படுவார். அவரைப்பற்றி தாழ்வாக கருவது ஏற்புடையதல்ல. அவர் ஒரு சுதந்திரப் போராட்ட வீரர் மற்றும் தீவிர தேசியவாதி'' என்று சாவர்க்கர்.

இவ்வாறு அவர் பேசினார். 

காந்தி தான் சாவர்க்கரிடம் கருணை மனுவை தாக்கல் செய்யும்படி சொன்னார் - ராஜ்நாத் சிங் | Samugam Gandhi Rajnathsign

காந்தி தான் சாவர்க்கரிடம் கருணை மனுவை தாக்கல் செய்யும்படி சொன்னார் - ராஜ்நாத் சிங் | Samugam Gandhi Rajnathsign