கடற்படை போர்க்கப்பலில் பயங்கர வெடி விபத்து : 3 கடற்படை வீரர்கள் பரிதாப பலி
மும்பை கடற்படை போர்க்கப்பலில் நேற்றிரவு ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்தில் 3 கடற்படை வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும், 11 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
மகாராஷ்டிர மாநிலம், மும்பை கடற்படை தளத்தில் கடற்படைக்கு சொந்தமான ஐஎன்எஸ் ரன்வீர் போர்க்கப்பல் நிறுத்தப்பட்டிருந்தது. நேற்று மாலை 4.30 மணி அளவில் அந்த கப்பலில் திடீரென பயங்கர வெடி விபத்து நிகழ்ந்தது.
இந்த விபத்தின் போது கப்பலில் இருந்த 3 கடற்படை வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 11 பேர் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கப்பலில் நடந்த வெடி விபத்துக்கும், கப்பலில் இருந்த ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துக்கும் எந்த தொடர்பும் கிடையாது என்று கூறப்படுகிறது. வெடி விபத்து தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.