‘எனக்கு ஒரு பொண்ணு வேணும்" விளம்பரம் கொடுத்த 80 வயது தந்தை - பிறகு மகனால் நடந்த கொடூரச் சம்பவம்
மஹாராஷ்டிரா மாநிலம், புனே, ராஜ்குருநகரைச் சேர்ந்தவர் சேகர் போர்ஹாடே (47). இவர் 80 வயசாகும் தன் தந்தையுடன் வாழ்ந்து வந்தார். அந்த சேகருக்கு கல்யாணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் அந்த சேகரின் தந்தை மனைவியில்லாமல் தனியாக வாழ்ந்து வந்தார்.
அவரை அவரின் மகன் மற்றும் மருமகள் சரியாக கவனிக்கவில்லை . இதனால், நிறைய சொத்துக்கள் வைத்திருந்த அந்த 80 வயது முதியவர், மனம் தளராமல் தன்னை கவனித்து கொள்ள ஒரு பெண் வேண்டும் என்று திருமண வெப்சைட்டில் விளம்பரம் கொடுத்துள்ளார்.
இந்த விளம்பரத்தினை பார்த்து, அந்த தாத்தாவிற்கு நிறைய போன் கால் வந்தது. இதை கேட்டு அவரின் மகன் மிகவும் கோபமடைந்தார். தந்தையிடம் சென்று, "இந்த வயசில் உங்களுக்கு பெண் வேண்டுமா?" என்று கேட்டு தகராறு செய்துள்ளார்.
மேலும், இப்படி விளம்பரம் கொடுத்ததால், வேறு ஒரு பெண் அவருக்கு மனைவியாக வந்து விட்டால் சொத்துக்களை அந்த பெண்ணுக்கு கொடுத்து விடுவாரோ என்று மகனுக்கு பயம் வந்தது.
அதனால், தன் தந்தையை கத்தியால் வெட்டியும், அங்குள்ள ஒரு கல்லை எடுத்து அவரின் தலையில் போட்டும் கொடூரமாக கொலை செய்துள்ளார்.
இதனையடுத்து, அவரே போலீசில் சரணடைந்தார். இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.