யானையின் சாணத்தைப் பார்த்து அதிர்ச்சியடைந்த ஆர்வலர்கள் - கழிவில் இருந்ததைப் பாருங்கள்...
யானைகள் பார்க்கப் பெரிதாக, பிரமாண்டமான உருவத்தில் இருக்கும். ஆனால், நிஜத்தில் சாந்த சொரூபமானவை கொண்டவை. பல நேரங்களில் மனிதர்களுக்கு யானைகளால் தொந்தரவு ஏற்படுவதுண்டு.
அண்மையில் மருதமலை அடிவாரத்தில் யானைக் காதலர்கள் 2 பேர் சென்று கொண்டிருந்தார்கள். இயற்கையின் மீதும், யானைகளின் மீதும் தீராத காதல் கொண்ட இவர்கள் மருதமலை அடிவாரத்தில் யானையின் சாணம்... அதாங்க இயற்கைக் கழிவு இருப்பதைப் பார்த்தார்கள். உடனே அதை அவர்கள் ஆராய்ச்சி செய்து பார்த்தபோது அதிர்ந்து போனார்கள்.
காரணம், அந்த யானைக் கழிவில் பால் கவர், மாஸ்க், சாம்பார் பொடி பாக்கெட், நாப்கின், பிஸ்கட் கவர் என ஏராளமான பிளாஸ்டிக் கழிவுகள் கிடந்துள்ளன. மருதமலை அடிவாரத்தில் குப்பைமேடு ஒன்று உள்ளது.
இது சோமையன்பாளையம் பஞ்சாயத்துக்குச் சொந்தமான குப்பை மேடாகும். இந்த குப்பை மேட்டை இங்கு அமைத்த போதே யானை ஆர்வலர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்தார்கள். ஆனாலும் எதிர்ப்பை மீறி கடந்த 2 ஆண்டுகளாக இந்த குப்பை மேடு செயல்பட்டு வருகிறது.
இந்த வீடியோவை பாருங்கள். யானை ஒன்று அந்த குப்பை மேட்டிலிருந்து இவ்வளவு கழிவுகளைச் சாப்பிட்டிருக்கிறது என்பது தெரியும்.
கோவை மருதமலை அடிவாரத்தில் கிடந்த யானை சாணத்தை ஆய்வு செய்தபோது...
— சிந்தனைவாதி (@PARITHITAMIL) January 10, 2022
பிளாஸ்டிக் கவர்,முக கவசம்,நாப்கின்.இருந்ததால் அதிர்ச்சி
# வணப்பகுதியை ஒட்டிய மனிதர்கள் குடியிருப்பால் வனவிலங்குகளுக்கு ஆபத்து pic.twitter.com/1tkOOtafJU