மத்திய அமைச்சரின் கார் மீது முட்டை வீச்சு - பரபரப்பு சம்பவம்
மத்திய உள்துறை இணையமைச்சர் அஜய் மிஷ்ராவின் கார் மீது இந்திய தேசிய மாணவர் காங்கிரஸ் அமைப்பினர் முட்டைகளை வீசியதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
ஒடிசாவின் கட்டாக்கில் நடைபெற்ற விழாவில் கலந்து கொள்வதற்காக நேற்று மத்திய இணை அமைச்சர் அஜய் மிஷ்ரா புவனேஸ்வர் சென்றார். அப்போது, விமான நிலையத்திற்கு வெளியே வந்து அவர் காரில் சென்ற போது காரின் மீது முட்டை வீசப்பட்டது. இதனால் அப்பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டது. முட்டை வீசியர்கள் அமைச்சருக்கு எதிராக கோஷங்களை எழுப்பினார்கள்.
போலீசாரும், பாதுகாப்பு படையினரும் ஆர்ப்பாட்டக்காரர்களை அப்புறப்படுத்தி முயற்சி செய்தனர். அப்போது, ஆர்ப்பாட்டக்காரர்கள் சத்தமாக முழக்கம் எழுப்பிக்கொண்டிருந்தனர். இதனால், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.
உத்தரபிரதேச மாநிலத்தில் லக்கிம்பூரில் விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் நடந்த வன்முறை சம்பவத்தில் ஆஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா குற்றச்சாட்டப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாகதான் அஜய் மிஸ்ராவின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து முட்டை வீச்சு சம்பவம் நடந்ததாக தெரியவந்துள்ளது.

பாகிஸ்தான் விமான நிலையம் அருகே குண்டு வெடிப்புகள்..! சிறிலங்கா எயார்லைன்ஸின் அவசர அறிவிப்பு IBC Tamil
