விசாகப்பட்டினத்தில் நிலநடுக்கம் : அலறி அடித்து ஓட்டம் பிடித்த பொதுமக்கள்

samugam-earthquake
By Nandhini Nov 14, 2021 06:50 AM GMT
Report

ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்தில் பல இடங்களில் நிலநடுக்கம் ஏற்பட்டதால் பயந்து போன மக்கள் அலறி அடித்துக் கொண்டு வீட்டை விட்டு ஓடி சாலைகளில் திரண்டனர்.

ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்தின் பல பகுதிகளில் இன்று காலை 7.13 மணியளவில் குறைந்தது 2 முதல் 3 நிமிடங்களுக்கு நிலநடுக்கம் உணரப்பட்டது. இதனால் மக்கள் பயந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வீடுகளை விட்டு வெளியே ஓடி வந்து சாலைகளில் திரண்டு நின்றனர். கடந்த 7 நாட்களாக விசாகப்பட்டினத்தில் 3.0 ரிக்டர் அளவுக்கு மேல் சிறிய அளவிலான நிலநடுக்கங்கள் ஏற்பட்டிருப்பதாக தெரியவந்துள்ளது.

இன்று காலை பதிவான 3.6 ரிக்டர் அளவில் பதிவாகி இருக்கிறது. இந்த நிலநடுக்கமானது கஜுவாக்காவில் இருந்து வடகிழக்கே 9.2 கிமீ தொலைவில் உருவானது. இன்று காலையில் ஏற்பட்ட நிலநடுக்கமானது பாலய்யா சாஸ்திரி லே அவுட், சீதம்மாதாரா, அல்லிபுரம், வேப்பகுண்டா, பெண்ந்துர்த்தி, சிம்மாசலம், அரிலோவாவா, பங்காரம்மா மெட்டா ஆகிய இடங்களில் உணரப்பட்டுள்ளதாக குறிப்பிடத்தக்கது.

இது குறித்து, ஆந்திர பல்கலைக்கழக பேராசிரியர் மல்லிகார்ஜுன ராவ் கூறுகையில், "ஞாயிற்றுக்கிழமை காலை திடீரென வெடிகுண்டு வெடித்தது போல் உணர்ந்தோம். நிலநடுக்கம் என்று அறிந்ததும் குடும்பத்துடன் தரை தளத்திற்கு விரைந்தேன்" என்றார்.

பெரிய விசாகப்பட்டினம் முனிசிபல் கார்ப்பரேஷன் மற்றும் விசாகப்பட்டினம் நகர காவல்துறை அதிகாரிகள் கூறுகையில், 3.6 ஆக பதிவான நிலநடுக்கத்தால் அசம்பாவிதங்கள் ஏதும் நடக்கவில்லை என்றனர். 

விசாகப்பட்டினத்தில் நிலநடுக்கம் : அலறி அடித்து ஓட்டம் பிடித்த பொதுமக்கள் | Samugam Earthquake