22 பேர் உயிரை பறித்த ஓட்டுநர்... - 190 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் அதிரடி

accident driver samugam
By Nandhini Jan 02, 2022 06:47 AM GMT
Report

மத்தியப் பிரதேசத்தில் ஏற்பட்ட பேருந்து விபத்தில் 22 பயணிகள் உயிரிழப்பு காரணமாக இருந்த ஓட்டுநருக்கு 190 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது.

கடந்த 2015ம் ஆண்டு பன்னா என்னும் இடத்தில் பேருந்து சென்று கொண்டிருந்த பேருந்து ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 22 பேர் உயிரிழந்தனர்.

இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது, விசாரணையில் பயணிகள் பேருந்தை மெதுவாக இயக்கச் சொல்லி கூறி இருக்கின்றனர். ஆனால் ஓட்டுநர் ஷம்சுதீன் பேருந்தை வேகமாக இயக்கி விபத்தை ஏற்படுத்தியுள்ளார்.

இதனையடுத்து, பேருந்து ஓட்டுநர் ஷம்சுதீனுக்கு 19 குற்றப்பிரிவுகளில் கீழ் 10 ஆண்டுகள் வீதம் 190 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் பேருந்தின் உரிமையாளருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.