கரடியிடம் சிக்கிக் கொண்ட எஜமானரை தன் உயிரை பணையம் வைத்து காப்பாற்றிய நாய் - நெகிழ்ச்சி சம்பவம்

samugam-dog-saving
By Nandhini Oct 28, 2021 05:17 AM GMT
Report

மேட்டுப்பாளையம் அருகே கரடியிடம் சிக்கிக்கொண்டு உயிருக்கு போராடிய எஜமானரை, வளர்ப்பு நாய் கரயுடன் போராடி காப்பாற்றிய சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

கோவை மாவட்டத்தைச் சேர்ந்தவர் ராமராஜ். இவர் ஒரு விவசாயி. இவர் மனைவி மற்றும் பெற்றோருடன் தனது தோட்டத்து வீட்டில் வசித்து வருகிறார். இவர் வீட்டில் பப்பி என்னும் நாட்டு நாயை ஒன்றை வளர்த்து வருகிறார் ராமராஸ். இந்நிலையில், சம்பவத்தன்று ராமராஜ் தோட்டத்தில் விவசாய வேலையை செய்து கொண்டிருந்தார்.

அப்போது, வனப்பகுதியிலிருந்து வெளியே வந்த கரடி திடீரென ராமராஜை தாக்கியது. இந்த தாக்குதலில் ராமராஜ் நிலை தடுமாறி கீழே விழுந்தார். கரடி அவரை மூர்க்கமாக நகத்தால் கீரியபடி கழுத்துப்பகுதியில் கடித்து குதற முற்பட்டது. கரடியின் பிடியில் சிக்கிக்கொண்டு உயிர் பிழைக்க ராமராஜன் போராடுவதை கண்ட அவரது வளர்ப்பு நாய் பப்பி, அவரை காப்பாற்றும் நோக்கில் கரடியின் மிக அருகாமையில் சென்று பயங்கரமாக குரைத்தது.

ஒரு கட்டத்தில் ஆக்ரோஷமாக கரடியை கடிக்க துவங்கியது நாய் பப்பி. வளர்ப்பு நாயின் இந்த செயலால் அச்சத்திற்குள்ளான கரடி, உடனடியாக ராமராஜனை விட்டுவிட்டு அங்கிருந்து காட்டுக்குள் ஓடிச்சென்று மறைந்து விட்டது. நாய் குரைக்கும் சத்தம்கேட்டு அக்கம், பக்கத்தினர் ஓடிவந்த வந்தனர். உடனடியாக ராமராஜனை மீட்டு மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். தக்க சமயத்தில் வளர்ப்பு நாய் பப்பி சென்று கரடியை தாக்காவிட்டால், ராமராஜன் இந்நேரம் உயிரிழந்திருப்பார் என்று குடும்பத்தினர் நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளனர். 

கரடியிடம் சிக்கிக் கொண்ட எஜமானரை தன் உயிரை பணையம் வைத்து காப்பாற்றிய நாய் - நெகிழ்ச்சி சம்பவம் | Samugam Dog Saving