"தீபாவளிக்கு எலக்ட்ரிக் ஸ்கூட்டர் பரிசு" - ஊழியர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த பாஸ் - குவியும் பாராட்டு
குஜராத்தை சேர்ந்த நிறுவனம் ஒன்று தங்களது ஊழியர்களுக்கு தீபாவளி பரிசாக எலக்ட்ரிக் ஸ்கூட்டரை வழங்கி இன்ப அதிர்ச்சி கொடுத்திருக்கிறது.
நேற்று நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை மக்களால் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. தீபாவளி என்று சொன்னாலே முதலில் நம் ஞாபகத்திற்கு வருவது போனஸ் மற்றும் பரிசுகள் தான்.
தீபாவளி பண்டிகையையொட்டி, எல்லா நிறுவனங்களிலும் ஊழியர்களுக்கு இனிப்பு, பட்டாசு, போனஸ் போன்றவை வழங்கும். ஆனால், அதையும் தாண்டி குஜராத்தை சேர்ந்த நிறுவனம் தங்களது ஊழியர்களுக்கு எலக்ட்ரிக் ஸ்கூட்டரை பரிசாக கொடுத்துள்ளது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. குஜராத் மாநிலம் சூரத்தை சேர்ந்த சுபாஷ் தவார் என்பவர் தனது ஊழியர்களுக்கு எலக்ட்ரிக் ஸ்கூட்டரை வழங்கி உள்ளார்.
இது குறித்து சுபாஷ் தவார் கூறுகையில், பெட்ரோல் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், தனது நிறுவனத்தில் பணியாற்றும் 35 ஊழியர்களுக்கு எலக்ட்ரிக் ஸ்கூட்டரை வழங்கியுள்ளேன். எலக்ட்ரிக் ஸ்கூட்டர் கொடுத்ததற்கு பெட்ரோல் விலை உயர்வு ஒரு காரணம் என்றாலும், சுற்றுச் சூழல் மாசடையக் கூடாது. சுற்றுச்சூழலை பாதுகாக்க தன்னால் இயன்றதை நான் செய்து வருகிறேன் என்றார். சுபாஷின் இந்த செயல் பலர் பாராட்டி வருகிறார்கள்.