டிடிவி தினகரனின் மகள் திருமண வரவேற்பு நிகழ்ச்சி - சசிகலா பங்கேற்பு
அதிமுகவில் இணைய பல முயற்சிகள் மேற்கொண்ட சசிகலாவுக்கு கட்சியில் இடம் கிடையாது என்று எடப்பாடிபழனிசாமி உள்ளிட்ட நிர்வாகிகள் திட்டவட்டமாக தெரிவித்து வருகின்றனர்.
இதனையடுத்து, சட்டமன்ற தேர்தல் நேரத்தில் அரசியலிலிருந்து ஒதுங்கினார் சசிகலா. ஆனால், சட்டமன்றத் தேர்தலில் அதிமுக படுதோல்வி அடைந்தது. இதனையடுத்து, சசிகலா, அதிருப்தி நிர்வாகிகள், தொண்டர்களுடன் தொடர்ந்து தொலைபேசியில் பேசி வந்தார்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு அதிமுக பொன்விழா ஆண்டு வந்தது. இதை முன்னிட்டு எம்ஜிஆர் நினைவு இல்லத்தில் அதிமுக கொடியை பொதுச்செயலாளர் என்ற பெயரில் ஏற்றி வைத்தார் சசிகலா. சென்னை ராமாபுரம் எம்ஜிஆர் இல்லத்தில் பல நலத்திட்ட உதவிகளை வழங்கினார் சசிகலா.
தற்போது தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து தொண்டர்களை சந்திக்க சசிகலா புறப்பட்டுள்ளார். ஒரு வாரம் அரசியல் சுற்றுப்பயணத்தில் மதுரை, தஞ்சாவூர், ராமநாதபுரம் என சசிகலா தொண்டர்களை சந்திக்க இருக்கிறார்.
இந்தச் சூழ்நிலையில், இன்று காலை 11 மணி அளவில் தஞ்சாவூர் மாவட்டம் பூண்டி ஸ்ரீ புஷ்பம் கல்லூரி வளாகத்தில் நடைபெற உள்ள டிடிவி தினகரனின் மகள் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் சசிகலா கலந்து கொண்டார்.
இந்த திருமண நிகழ்ச்சியில் சசிகலா மற்றும் அரசியல் பிரமுகர்கள் உள்ளிட்ட சிலரை சந்தித்தார். இதனையடுத்து, 25 இடங்களில் தொண்டர்களை சந்திக்க அவர் திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றனர்.