கணவன் பிரிவைத் தாங்க முடியாத மனைவி - எடுத்த விபரீத முடிவு - அதிர்ச்சி சம்பவம்

samugam-death-sucide
By Nandhini Oct 03, 2021 04:45 AM GMT
Report

ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம், பெங்களூரு அருகே நெலமங்காவைச் சேர்ந்தவர் பிரசன்னகுமார். இவருடைய மனைவி வசந்தா. இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். இந்நிலையில், பிரசன்னகுமார் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு கொரோனா தொற்று காரணமாக சிகிச்சை பலனின்றி இறந்து போனார்.

இதனையடுத்து, கணவர் இறந்து ஒரு வருடம் ஆகியும் அந்த துக்கத்திலிருந்து மனைவியால் வெளியே வர முடியவில்லை. இதனால் மனஅழுத்தத்தில் இருந்து வந்த வசந்தா தன் குழந்தைகளுடன் தற்கொலை செய்து கொண்டுள்ளார். ஓர் அறையில் வசந்தாவும், மகளும், மகன் மற்றொரு அறையிலும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதை அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். காவல்துறையினர் விசாரணையின்போது, கடந்த வருடம் அவருடைய கணவர் இறந்து போனதால் மனமுடைந்து காணப்பட்ட இந்த குடும்பத்தினர் கடிதம் எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளது தெரிய வந்துள்ளது.

அந்தக் கடிதத்தில் நாங்கள் வீட்டுக்காக வாங்கிய கடன் ஓரளவு அடைக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள கடன் தொகையை இந்த வீட்டை விற்பனை செய்து எடுத்துக்கொண்டு, மீதி உள்ள பணத்தை அனாதை ஆசிரமத்திற்கு வழங்குமாறு எழுதியுள்ளார். ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

கணவன் பிரிவைத் தாங்க முடியாத மனைவி - எடுத்த விபரீத முடிவு - அதிர்ச்சி சம்பவம் | Samugam Death Sucide