மேற்குவங்க அமைச்சர் சுப்ரதா முகர்ஜி காலமானார் - முதலமைச்சர் மம்தா பானர்ஜி அஞ்சலி
மேற்குவங்க மாநில ஆளும் திரிணாமுல் காங்., மூத்த தலைவரும், அமைச்சருமான சுப்ரதா முகர்ஜி (75) நேற்று உயிரிழந்தார்.
கடந்த அக்டோபர் 25ம் தேதி சுப்ரதா முகர்ஜிக்கு மூச்சுதிணறல் ஏற்பட்டது. இதனையடுத்து, கோல்கட்டாவில் உள்ள எஸ்.எஸ்.கே.எம். மருத்துவமனையில் சிகிச்சைக்காக அவர் அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று இரவு 9: 30 மணி அளவில் உயிரிழந்தார். சுப்ரதா முகர்ஜி, திரிணாமுல் காங்கிரசின் மூத்த தலைவர் ஆவார்.
இவர் மேற்குவங்க தலைநகர் கோல்கட்டா முன்னாள் மேயராகவும், முதல்வர் மம்தா பானர்ஜி அமைச்சரவையில் பஞ்சாயத்து ராஜ் அமைச்சராகவும் இருந்தார்.
இவரின் இறப்பு குறித்து தகவல் அறிந்த முதல்வர் மம்தா பானர்ஜி தனது நிகழ்ச்சிகளை ரத்து செய்துவிட்டு, நேற்று இரவு எஸ்.எஸ்.கே.எம். மருத்துவமனைக்கு சென்று சுப்ரதா முகர்ஜி உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.