பத்மவிபூஷண் விருது பெற்ற பிரபல எழுத்தாளர் பாபாசாகேப் புரந்தரே உயிரிழந்தார்
பத்மவிபூஷண் விருது பெற்ற 99 வயதுடைய மகாராஷ்டிராவின் புகழ்பெற்ற எழுத்தாளர் பாபாசாகேப் புரந்தரே காலமானார்.
மகாராஷ்டிர மாநிலத்தின் புகழ்பெற்ற வரலாற்று ஆசிரியர் மற்றும் எழுத்தாளர் பாபாசாகேப் புரந்தரே. இவர் மராட்டிய மன்னன் சத்ரபதி சிவாஜி குறித்த தனது படைப்புகள் மூலமாக மிகவும் புகழ்பெற்றவராவார்.
மேலும் 2019ம் ஆண்டு இவருக்கு இந்தியாவின் 2வது மிக உயரிய குடிமகன் விருதான பத்ம விபூஷண் விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், கடந்த ஒரு வாரமாக நிமோனியா நோயால் பாதிக்கப்பட்டு வந்த புரந்தரே, புனேவில் உள்ள தீனாநாத் மங்கேஷ்கர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், மருத்துவ சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை 5 மணியளவில் அவர் உயிரிழந்தார். பாபாசாகேப் புரந்தரேவின் மறைவிற்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.
