மனமுடைந்த வயதான தம்பதி தீக்குளித்து தற்கொலை - சிக்கிய கடிதத்தில் திடுக்கிடும் தகவல்
சொத்துப் பிரச்சினை தகராறில் வயதான தம்பதி வீட்டிலேயே தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது.
சென்னை அம்பத்தூரில் வசித்து வந்தவர் ஜானகிராமன் (82). இவரது மனைவி மாரியம்மாள் (74). தனது மனைவி மற்றும் மகன் யுவராஜ் உடன் ஜானகிராமன் வசித்து வந்தார். இவர்களது வீட்டின் மற்றொரு வளாகத்தில் உறவினர் சசிகலா என்பவர் வசித்து வருகிறார்.
இவர்களுக்கு இடையே பல ஆண்டுகளாக சொத்துப் பிரச்சனை இருந்து வந்துள்ளது. இதனால், இவர்கள் இரு குடும்பத்தினருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இந்நிலையில், சசிகலா ஜானகிராமனின் வீட்டு கழிவுநீர் கால்வாயை அடைந்திருக்கிறார். இதனால் கழிவுநீர் வெளியேறாமல் இருந்துள்ளது. இந்நிலையில் சசிகலா கால்வாயை அடைத்ததை அறிந்து ஜானகிராமன் அவரிடம் கேட்டிருக்கிறார். அப்போது ஜானகிராமனையும் அவரது குடும்பத்தையும் சசிகலா கேவலமாக திட்டித் தீர்த்துள்ளார்.
மனமுடைந்த இந்த தம்பதி வீட்டிலேயே பெட்ரோல் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டனர். இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் இருவரது உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அப்போது, போலீசார் வீட்டை சோதனை செய்து பார்த்தபோது, ஜானகிராமன் எழுதிய கடிதம் ஒன்று சிக்கியது. அந்தக் கடிதத்தில், தனது மரணத்திற்கு சசிகலா தான் காரணம் என்றும், அவருக்கு தண்டனை வழங்க வேண்டும் என்றும் அதில் எழுதியிருக்கிறார். இதன் அடிப்படையில், போலீசார் சசிகலாவை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.