சாப்பிடும்போது அமர்ந்த நிலையில் உயிரிழந்த நபர் - அதிர்ச்சி சம்பவம்!
எந்த வலியும் தெரியாமல் இறப்பது ஒரு வரம் என்று பெரியவர்கள் சொல்வதை நாம் கேட்டிருக்கிறோம். அதுபோல்தான் எந்த ஒரு அடையாளமும் தெரியாமல் ஒரு மனிதர் உட்கார்ந்தது உட்கார்ந்தபடியே மரமடைந்துள்ளார்.
இந்தப் படத்தில் தெரியும் மனிதர் சப்பாத்தியை சாப்பிடுவதற்காக அதன் மீது வைத்த கை அப்படியே இருக்கிறது. உட்கார்ந்தபடியே வாயிலிருந்து ரத்தம் ஒழுகியபடி மரணமடைந்துள்ளார்.
இந்த விஷயம் யாருக்கும் தெரியவில்லை. குடும்பத்தினருக்கு தெரிவதற்கு சுமார் 24 மணி நேரமாகியுள்ளது. அதற்குள் அதே நிலையில் கட்டையைப் போல் சடலம் இறுகியுள்ளது. சித்தி பேட்டை மாவட்டம் வர்கல் மண்டலம் துண்டுபல்லியைச் சேர்ந்த காசால சாயிலு (46). இவர் பாலட கிராமத்தில் உள்ள ஒரு உறவினரின் அந்திமக் கிரியையில் கலந்து கொண்டார்.
அதனையடுத்து, இவர் அல்லாபூரில் மதுவும், உணவு பொட்டலமும் வாங்கிக் கொண்டு சாலையில் வந்து கொண்டிருந்தார். அப்போது சிறிது நேரம் தரையில் அமர்ந்து சாப்பிடுவதற்காக உணவைப் பிரித்து கையை உணவில் வைத்துள்ளார். அப்போது உணவில் கையை வைத்தவாறே மாரடைப்பால் இறந்தார். நீண்ட நேரம் ஆகியும் வீட்டிற்கு சாயிலு திரும்பாததால் குடும்பத்தினர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
இது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், சாலையருகில் அமர்ந்தபடியிருந்த சாயிலுவின் சடலத்தை கண்டனர். உடனே, இவரை மீட்ட போலீசார் மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இச்சம்பவம் குறித்து, தூப்ரான் சமூக ஆரோக்கிய நிலையம் சூப்ரவைசர் அமர்சிங் கூறுகையில், சைலண்ட் மயோகார்டியல் இன்பார்க்சன் காரணமாக அவருக்கு மாரடைப்பு வந்திருக்கக்கூடும். இது ஏற்பட்ட நபருக்கு வலியோ வேறு ஏதும் அடையாளங்களோ இல்லாமலேயே உயிர் பிரிந்துவிடும் என்றார்.