10 வயது சிறுவனுக்கு பாலியல் வன்கொடுமை செய்த கொடூரனுக்கு 33 ஆண்டுகள் சிறை - நீதிமன்றம் அதிரடி

Cruelty samugam Court Action
By Nandhini Jan 02, 2022 09:30 AM GMT
Report

10 வயது சிறுவனை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் 40 வயது நபருக்கு 33 ஆண்டுகள் சிறை மற்றும் ரூ.2 லட்சம் அபராதம் விதித்து நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டிருக்கிறது.

கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஹுசைன் (40). இவர் கடந்த 2019ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், தனது வீட்டுக்கு அருகில் விளையாடி கொண்டிருந்த 10 வயது சிறுவனை தனியாக அழைத்துள்ளார்.

அழைத்துச் சென்ற இவர் வீட்டிற்கு அருகிலுள்ள குளக்கரையில் சிறுவனுக்கு ஆபாச வீடியோவை காண்பித்து, அந்த சிறுவனை பலமுறை பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளார்.

இந்நிலையில், சிறுவர்கள் மற்றும் சிறுமிகளுக்கு பாலியல் விழிப்புணர்வு குறித்து ஜனமைத்திரி காவல் துறையினர் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினார். இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில், தான் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி இருக்கிறோம் என்பதை அந்த 10 வயது சிறுவன் உணர்ந்தான். இது குறித்து அந்த நிகழ்ச்சியின்போது காவல்துறையினரிடம் சிறுவன் தகவல் கொடுத்தான்.

இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த போலீசார் ஹுசைனிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில், ஹுசைன் 4க்கு மேற்பட்ட சிறுவர்களை பாலியல் வன்கொடுமை செய்துள்ளது தெரியவந்தது.

இதனையடுத்து, அந்த 4 சிறுவர்களும் 12 வயதுக்குட்பட்டவர்கள் என்பது தெரியவந்தது. சிறுவன் கொடுத்த தகவலின் அடிப்படையில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், பட்டாம்பி அதிவேக நீதிமன்றத்தில் ஹுசைனை ஆஜர்படுத்தினார்கள்.

ஹுசைன் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டதால், குற்றவாளிக்கு தண்டனையாக 33 ஆண்டுகள் சிறையும், 2 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து நீதிபதி சதீஷ்குமார் தீர்ப்பளித்தார்.