நண்பனின் கள்ள உறவுக்கு உதவி செய்த இளைஞர் - சரமாரியாக வெட்டி படுகொலை
கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் பிரபாகரன். இவர் ராமநாதிச்சன் புதூரைச் சேர்ந்த திருமணமான பெண் ஒருவருடன் கள்ள உறவில் இருந்து வந்தார்.
குமாரபுரம் தோப்பூரை சேர்ந்த ஒருவர் நம் பகுதியில் உள்ள பெண்ணுடன் கள்ள உறவில் வைத்ததை அறிந்து ஆத்திரம் அடைந்த ராமநாதிச்சன் புதூரை சேர்ந்த லியோன், பிரபாகரன், ரோஜ் அஜய் ஜான்சன் ஆகியோர் பிரபாகரனை தட்டிக் கேட்டுள்ளனர். இதனால் இருவருக்குள்ளும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பின்னர் அது கைகலப்பாக மாறியது.
இதனால், இவர்களுக்குள் முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் குமாரபுரம் தோப்பூரில் உள்ள ஒரு உணவகத்தில் இரவு சாப்பிட்டு விட்டு வெளியே வந்த லியோன், பிரபாகரன், ரோஜ் அஜய் ஜான்சனை குமாரபுரம் தோப்பூரைச் சேர்ந்த பிரபாகரன், கண்ணன் ஆகியோர் சரமாரியாக வெட்டி உள்ளனர்.
இச்சம்பவத்தில் பலத்த காயமடைந்த ரோஜ் அஜய் ஜான்சன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். மேலும் படுகாயமடைந்த பிரபாகரன், லியோன் ஆகியோர் அஞ்சுகிராமம் போலீசில் புகார் கொடுத்துள்ளனர். இந்தப் புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.