எல்.கே.ஜி சிறுமிக்கு பாலியல் தொந்தரவு - ஆசிரியருக்கு 10 ஆண்டுகள் சிறை - ரூ.20,000 அபராதம் - நீதிமன்றம் அதிரடி உத்தரவு
எல்.கே.ஜி. சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த ஆசிரியருக்கு 10 ஆண்டுகள் சிறை மற்றும் 20,000 அபராதம் விதித்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
புதுச்சேரியில், மழலையர் பள்ளி ஆசிரியர் எர்லம் பெரைரா, எல்.கே.ஜி சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தாக போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. அதன் அடிப்படையில், அவர் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கை விசாரித்த போக்ஸோ சிறப்பு நீதிமன்றம் பாதிக்கப்பட்ட சிறுமி மற்றும் அவரது பெற்றோரின் வாக்குமூலங்கள் முன்னுக்கு பின் முரணாக இருந்தது.
இதனையடுத்து, மருத்துவ அறிக்கைகளை வழக்குக்கு ஆதரவாக இல்லை என்றும் கூறி ஆசிரியரை விடுதலை செய்து தீர்ப்பளித்தது. இதனை காவல்துறை தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வேல்முருகன், பாதிக்கப்பட்ட 4 வயது சிறுமி ஒவ்வொரு கட்டத்திலும் ஒரே மாதிரி வாக்குமூலம் அளிப்பார் என எதிர்பார்க்க முடியாது.
ஆசிரியர் பெரைரா குற்றம் புரிந்துள்ளதற்கு ஆதாரங்கள் இருப்பதாகவும் கூறி கீழமை நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்து தீர்ப்பளித்திருக்கிறார். மேலும், வழக்கின் புலன் விசாரணையில் உள்ள குறைகளால், குற்றவாளிகள் எளிதாக தப்பிவிடுவதாக நீதிபதி வேதனை தெரிவித்தார். இதனையடுத்து, ஆசிரியருக்கு 10 ஆண்டுகள் சிறையும், 20,000 அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.