காபி குடித்தால் கொரோனா தொற்று ஏற்படாது - ஆய்வில் தகவல்
அதிகம் காபி குடிப்பவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்படுவது கிடையாது என்று ஆய்வில் தெரியவந்துள்ளதாக தகவல் தெரிவித்திருக்கிறார் காபி வாரிய விரிவாக்கத் துணை இயக்குனர் கருத்த மணி.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் கீழ்மலை கிராமமான தாண்டிக்குடியில் காபி வாரிய ஆராய்ச்சி நிலையம் செயல்பட்டு வந்துக் கொண்டிருக்கிறது.
இந்த ஆராய்ச்சி நிலையத்தில் 7வது சர்வதேச காபி தினம் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் காபியின் பயன்பாடு குறித்தும், காபி விவசாயம் குறித்தும் மலை கிராம விவசாயிகளுக்கு காபி வாரியத்தினர் எடுத்து கூறினார்
. காபி விவசாயத்திற்கு அரசுகள் வழங்கக்கூடிய சிறப்பு சலுகைகள் குறித்தும், காபி விவசாயத்தில் கிடைக்கும் வருமானம் குறித்தும் ஆலோசனைகள் கொடுத்தார். காபி செடிகள் பராமரிப்பு பற்றியும் விவசாயிகளுக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் 5355 என்கிற புது உயர் ரக காபி நாற்றுக்கள் அறிமுகம் செய்யப்பட்டன. 150 விவசாயிகளுக்கு இந்த நாற்றுகளை இலவசமாக வழங்கப்பட்டது.
இந்த ரக காபி செடி நோய் தாக்கத்திற்கு எதிராக இருப்பதாகவும் அதிக லாபம் தரக்கூடியவை என்றும் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் காபி வாரிய விரிவாக்கம் துணை இயக்குனர் கருத்தமணி பேசியதாவது -
தினமும் காபி குடிப்பதால் உடல் சோர்வு நீங்கி புத்துணர்ச்சி ஏற்படுகின்றது.
ஆண்களுக்கு ஏற்படக்கூடிய புரோஸ்டேட் புற்றுநோய் காபி குடிப்பதால் 20% கட்டுப்படுத்தப்படும். தினமும் காபி குடிப்பதால் உடல் எடை குறைப்பதற்கு முக்கிய பங்கு வகிக்கிறது. தினமும் காபி குடிப்பவர்களுக்கு கொரோனா தொற்று அதிகமாக ஏற்படவில்லை.
காபி குடிக்காத மக்களுக்கு கொரோனா தொற்று அதிகம் ஏற்பட்டுள்ளதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.