மருத்துவமனை ஊழியர்களின் அலட்சியத்தால் பறிப்போன குழந்தையின் உயிர் - தாய் கதறல்

samugam-child-death Mom cries
By Nandhini Nov 27, 2021 04:24 AM GMT
Report

மருத்துவமனையில் பணியாற்றும் ஊழியர்களின் அலட்சியத்தால், இரண்டரை மாத குழந்தை பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது.

இராமநாதபுரம், மூலக்கொத்தளத்தைச் சேர்ந்தவர் சேதுராஜா. இவரின் மனைவி கஸ்தூரி, இவர்களுக்கு இரண்டரை மாத ஆண் குழந்தைக்கு காய்ச்சல் வந்தது. இதனையடுத்து, குழந்தையை கொண்டு வந்து தனியார் மருத்துவமனையில் காட்டி இருக்கிறார்கள். அங்கு சிகிச்சை எடுத்த பிறகு அவர்கள் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல கூறினார்கள். அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்சில் சென்றனர்.

அப்போது, அவசர சிகிச்சை பிரிவு, குழந்தைகள் பிரிவு என மாறி மாறி அலைக்கழித்திருக்கின்றனர். இதைத் தொடர்ந்து சிறிது நேரம் ஆனதும், அவசர சிகிச்சை பிரிவில் குழந்தையை காட்டிய போது ஏற்கெனவே குழந்தை இறந்து விட்டது என்று கூறியுள்ளனர்.

மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை ஊழியர்கள் அலட்சியப் போக்குடன் செயல்பட்டதால் தான் என்னுடைய குழந்தை இறந்து விட்டதாக குழந்தையின் தாய் கண்ணீர் விட்டு கதறி அழுதார். மருத்துவமனையில் இவர் கதறி அழுததை பார்க்கும் போது நெஞ்சம் கனக்கிறது.