தமிழகத்தில் இந்த 7 மாவட்டங்களில் இன்று வெளுத்து வாங்கப்போகும் கனமழை - வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

tamilnadu
By Nandhini Nov 06, 2021 03:03 AM GMT
Report

நீலகிரி, ஈரோடு உள்ளிட்ட 7 மாவட்டங்களுக்கு இடியுடன் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு -

மத்திய மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய ஆந்திர கடலோர பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி (5.8 கி.மீ., உயரம் வரை) காரணமாக நீலகிரி, கோவை, ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களுக்கு இன்று இடியுடன் கூடிய கனமழை பெய்ய உள்ளது. ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்யக்கூடும். 

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் இந்த 7 மாவட்டங்களில் இன்று வெளுத்து வாங்கப்போகும் கனமழை - வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை | Samugam Chief Minister Of Chhattisgarh