2 மாடல் அழகிகள் மரணத்தில் திடீர் திருப்பம் - திடுக்கிடும் தகவல் அம்பலம்

Arrested car-accident Model beauties death
By Nandhini Nov 29, 2021 06:26 AM GMT
Report

தற்போது, இரண்டு மாடல் அழகிகள் மரணத்தில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது.

கடந்த 1ம் தேதி கேரள மாநிலத்தின் எர்ணாகுளம் மாவட்டத்தில் நகரின் வைட்டிலாவில் கோர விபத்து நடந்தது. இந்த விபத்தில் தென்னிந்திய அழகி அன்சி கபீர், கேரள அழகி அஞ்சனா ஷாஜன் ஆகியோர் கார் மரத்தில் மோதி அப்பளமாக நொறுங்கினார்கள். இதில், சம்பவ இடத்திலேயே இரண்டு பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

அன்சி கபீர் திருவனந்தபுரத்தைச் சேர்ந்தவர். அஞ்சனா சாஜன் திருச்சூரை சேர்ந்தவர். கடந்த 2019ம் ஆண்டு நடைபெற்ற கேரள அழகிப்போட்டியில் அன்சி கபீர் முதலிடத்தை பிடித்தார். அப்போட்டியில், அஞ்சனா சாஜன் 2வது இடம் பிடித்தார். இதன் பிறகு, தென்னிந்திய அழகிப் போட்டியிலும் பங்கேற்று அன்சி கபீர் மகுடம் சூடி உள்ளார். தோழிகளான அன்சி கபீர் - அஞ்சனா சாஜன் இருவரும் மாடலிங் துறையில் கலக்கி கொண்டு வந்துக் கொண்டிருந்தனர்.

இதனையடுத்து, கடந்த 1ம் தேதி, போர்ட் பியோ காரில் கொச்சி தேசிய நெடுஞ்சாலையில் வேகமாக சென்றனர். அப்போது, அதிவேகமாக கார் சென்றதால் அங்குள்ள மரத்தில் மோதி கார் பயங்கர விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், அன்சி - அஞ்சனா இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அவருடன் பயணம் செய்த மற்ற 2 பேரும் தீவிர சிகிச்சையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இது குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் அங்கு உள்ள பொது மக்களிடம் விசாரணை நடத்திய போது, கார் அதிவேகமாக வந்தது. கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. குறுக்கே ஒரு பைக் வந்தபோது திடீரென்று பிரேக் அடித்த போது, சாலையில் நடுவே இருந்த மரத்தில் மோதி கார் அப்பளமாக நொறுங்கியது.

இந்த காருக்கு பின்னால் ஒரு ஆடி கார் ஒன்று வேகமாக பின் தொடர்ந்து வந்தது என்று தெரிவித்தனர். அழகிகள் இருவரும் அருந்திய குளிர்பானத்தில் அவர்களுக்குத் தெரியாமல் அதிகம் போதை மருந்து கலந்து கொடுக்கபட்டிருப்பதாகவும், அது தெரியாமல் அவர்கள் கார் ஓட்டிச் சென்றால் விபத்து ஏற்பட்டு மரணம் நிகழ்ந்துள்ளதாக கேரள போலீசாருக்கு ஒரு எஸ்எம்எஸ் வந்தது

. இதனையடுத்து, அழகிகள் சென்ற அந்த ஓட்டலுக்கு சென்று சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது சம்பந்தப்பட்ட அன்று சிசிடிவி காட்சிகள் அனைத்தும் அழிக்கப்பட்டிருந்தது. இதனால் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. மேலும், அவர்கள் வந்த காரில் 2 ஆண்கள் இருந்தனர். அந்த காருக்கு பின்னால் ஒரு கார் வேகமாக வந்துள்ளது. வந்த ஆடி கார் இவர்களை துரத்திக் கொண்டு வந்துள்ளது. அதனால்தான் இவர்கள் வேகமாக காரை ஓட்டிச் சென்றுள்ளனர் என்பது விசாரணையில் தெரியவந்தது.

அழகிகள் அன்று பார்ட்டி நடத்திய போது, அந்த ஓட்டலை சேர்ந்த ராய் என்பவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது, அந்த ஆடி கார் அழகிகளை வேண்டுமென்றே பாலோவ் செய்திருக்க வேண்டும். அதனால்தான் அவர்களிடமிருந்து தப்பிக்க காரை வேகமாக ஓட்டி இருக்கிறார்கள் என்ற கோணத்தில் விசாரணையை போலீசார் நடத்தி வந்தனர்.

நடந்த பார்ட்டியில் அழகிகளுக்கும் நம்பர் 18 என்கிற ஹோட்டலை சேர்ந்த ராய் என்பவருக்கும் இடையே வாக்குவாதம் நடந்துள்ளது. இதனையடுத்து, அந்த ஆழகிகள் கார் பின்னால் அந்த ஆடி காரில் ராய் சென்றுள்ளார். இதனால் அவர்தான் வாக்கு வாதத்திற்கு பின்னர் அந்த அழகிகள் காரில் புறப்பட்டதும், அவர்களை துரத்திக் கொண்டு சென்றிருக்கிறார் என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை தொடங்கினார்கள்.

இதனையடுத்து, நம்பர் 18 ஓட்டலின் உரிமையாளர் ராய் உள்ளிட்ட 5 ஊழியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அழகிகள் காரை பின் தொடர்ந்து சென்றது சைஜூ தங்கச்சன் என்பது தற்போது தெரியவந்துள்ளது. அழகிகளிடம் அன்று போதைப்பொருட்கள் கொடுத்துள்ளனர். அதை வாங்காமல் சென்றதால்தான் காரை துரத்திக் கொண்டு சென்றிருக்கிறார் என்பது தெரிய வந்துள்ளது. இதன் பிறகு, அவரை போலீசார் கைது செய்துள்ளனர். 

2 மாடல் அழகிகள் மரணத்தில் திடீர் திருப்பம் - திடுக்கிடும் தகவல் அம்பலம் | Samugam Car Accident 2 Arrest