Monday, May 19, 2025

பப்ஜி மதன் திடீரென மருத்துவமனையில் அனுமதி

Admitted to hospital samugam-babji-madan
By Nandhini 3 years ago
Report

புழல் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் பப்ஜி மதன், முதுகு வலி காரணமாக ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் உள்ள சிறைக் கைதிகள் வார்டில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.

யூ-டியூப்பில் ஆபாசமான பேச்சுக்களை பேசி வீடியோக்களை பதிவிட்டு வந்த பப்ஜி மதனை, கடந்த ஜூன் மாதம் 18ம் தேதி சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.

இந்த வழக்கில் மதன் மீது கடந்த ஜூலை மாதம் 6ம் தேதி குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டு, அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், பப்ஜி மதன், முதுகு வலி காரணமாக ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் உள்ள சிறைக் கைதிகள் வார்டில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். 

பப்ஜி மதன் திடீரென மருத்துவமனையில் அனுமதி | Samugam Babji Madan Admitted To Hospital