பாபாசாகேப் புரந்தரே மரணம் - வார்த்தைகளால் சொல்ல முடியாத அளவிற்கு வேதனைப்படுகிறேன் – பிரதமர் மோடி

samugam-babasaheb-purandare-death-modi-mourning
By Nandhini Nov 15, 2021 06:43 AM GMT
Report

புகழ்பெற்ற எழுத்தாளர் பாபாசாகேப் புரந்தரே உயிரிழந்த செய்திக் கேட்டு வார்த்தைகளால் சொல்ல முடியாத அளவு வேதனைப்படுகிறேன் என்று பிரதமர் மோடி தெரிவித்திருக்கிறார்.

மகாராஷ்டிர மாநிலத்தின் வரலாற்று புகழ் பெற்ற எழுத்தாளர் பாபாசாகேப் புரந்தரே (99). இவருக்கு 2019ம் ஆண்டு மிக உயரிய குடிமகன் விருதான பத்ம விபூஷன் விருது வழங்கப்பட்டது. நிமோனியாவால் பாதிக்கப்பட்ட புரந்தரே இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவரின் மறைவிற்கு பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் இரங்கல் பதிவை வெளியிட்டுள்ளார்.

அந்த பதிவில், நான் வார்த்தைகளால் சொல்ல முடியாத அளவுக்கு வேதனைப்படுகிறேன். பாபாசாகேப் புரந்தரே அவர்களின் மறைவு வரலாறு மற்றும் கலாச்சார உலகில் மிகப்பெரிய வெற்றிடத்தை விட்டு சென்று உள்ளது என தெரிவித்துள்ளார். மேலும் வரும் தலைமுறையினருக்கு சத்ரபதி சிவாஜி மஹாராஜா உடன் மேலும் இணைந்திருப்பதற்கு வழிவகை செய்த புரந்தரேவுக்கு நன்றி. அவரது மற்ற படைப்புகளும் நினைவுகூரப்படும் என பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார்.