கேலி செய்தவரை கன்னத்தில் அடித்த பெண் - பிளேடால் முகத்தை கிழித்து இளைஞர்கள் கொடூரத் தாக்குதல் - அதிர்ச்சி சம்பவம்

India
By Nandhini Jun 13, 2022 01:32 PM GMT
Report

போபாலில் தன்னை கேலி செய்தவர்களில் ஒருவரை கன்னத்தில் அறைந்த பெண்ணுக்கு முகத்தில் பிளேடால் தாக்கியதில் அவருக்கு முகத்தில் 118 தையல் போடப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

பிளேடால் தாக்குதல்

கடந்த ஜூன் 9ம் தேதி அன்று 3 இளைஞர்கள் சேர்ந்து 40 வயது மதிக்கத்தக்க ஒரு பெண்ணை கேலி செய்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த அப்பெண் கேலி செய்த மூன்று பேரில் ஒருவரின் கன்னத்தில் அறைந்துள்ளார். இதனால், கோபமடைந்த அந்த இளைஞர்கள் அப்பெண்ணின் முகத்தை பிளேடால் கடுமையாக தாக்கி விட்டு அங்கிருந்து தப்பியோடிவிட்டனர்.

முகத்தில் 118 தையல்

பிளேடால் வெட்டப்பட்ட அப்பெண்ணின் முகத்தில் ரத்தம் கொட்டியது. இவரின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம், பக்கத்தினர் அப்பெண்ணை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். மருத்துவமனையில் அப்பெண்ணுக்கு முகத்தில் மட்டும் 118 தையல் போடப்பட்டது.

3 பேர் கைது

இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். முதற்கட்ட விசாரணையில், 3 பேரில் 2 பேர் சிறார் என்ற தகவல் வெளியானது. இதனையடுத்து, அந்த 3 இளைஞர்களையும் போலீசார் கைது செய்துள்ளனர். 3 பேருக்கும் கடுமையான சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கேலி செய்தவரை கன்னத்தில் அடித்த பெண் - பிளேடால் முகத்தை கிழித்து இளைஞர்கள் கொடூரத் தாக்குதல் - அதிர்ச்சி சம்பவம் | Samugam Attack Woman

முதல்வர் நேரில் சந்தித்து ஆறுதல்

பாதிக்கப்பட்ட பெண்ணை அம்மாநில முதல்வர் நேரில் சென்று நலம் விசாரித்தார். மேலும், 1 லட்ச ரூபாய் நிவாரணத் தொகையை வழங்க உத்தரவிட்டுள்ளார். அப்பெண்ணின் 3 குழந்தைகளின் கல்விச் செலவை அரசே ஏற்றுக்கொள்ளும் என்று உறுதியளித்தார்.

வீடு இடித்து தரைமட்டம்

முக்கிய குற்றவாளியான பாத்ஷா பேக் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. இந்தச் சம்பவத்தையடுத்து பாத்ஷா பேக் வீட்டை பொதுப்பணித் துறையினர் நேற்று இடித்து தரைமட்டமாக்கினர். தற்போது அந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.