தீபாவளி கொண்டாட்டம் : எல்லையில் பாகிஸ்தான் ராணுவத்தினருடன், நம் ராணுவ வீரர்கள் இனிப்புகள் பரிமாற்றம்

samugam--army-soldiers-sweet-sharing
By Nandhini Nov 05, 2021 03:35 AM GMT
Report

தீபாவளி பண்டிகை நேற்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. இதனையொட்டி நேற்று பாகிஸ்தான் ராணுவத்தினருடன் நம் எல்லைப் பாதுகாப்புப் படையினர் இனிப்புகளை பரிமாறிக் கொண்டனர்.

குஜராத்தில் உள்ள சர்வதேச எல்லைப் பகுதிகளில், தேசிய அளவில் கொண்டாடப்படும் பண்டிகைகளின்போது பாகிஸ்தான் ராணுவத்தினருடன், நம் எல்லைப் பாதுகாப்புப் படையினர் இனிப்புகளை பரிமாறிக்கொள்ளும் சம்பிரதாய நிகழ்வு கடைபிடிக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நேற்று எல்லைப் பகுதியில், இருநாட்டு ராணுவ வீரர்களும் இனிப்புகளை பரிமாறிக் கொண்டார்கள்.

இது குறித்து எல்லைப் பாதுகாப்புப் படையினர் வெளியிட்ட அறிக்கையில் கூறுகையில், தேசிய அளவில் கொண்டாடப்படும் பண்டிகைகளின்போது இருநாட்டு ராணுவ வீரர்களும் இனிப்புகள் மற்றும் வாழ்த்துகளை பரிமாறிக்கொள்வதால், பரஸ்பர நல்லிணக்கம் மற்றும் சகோதரத்துவம் மேம்படுத்தும். இருநாட்டு எல்லைப் பாதுகாப்புப் படைகளுக்கும் இடையிலான நட்புறவை பராமரிப்பதிலும், எல்லையில் பாதுகாப்பான சூழலை பேணிக் காப்பதிலும், இந்த நிகழ்வு முக்கிய பங்கு வகிக்கும் என நம்புகிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதே போல், வங்கதேச ராணுவ வீரர்களுடனும் நம் வீரர்கள் எல்லையில் இனிப்புகளை பரிமாறிக் கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தீபாவளி கொண்டாட்டம் : எல்லையில் பாகிஸ்தான் ராணுவத்தினருடன், நம் ராணுவ வீரர்கள் இனிப்புகள் பரிமாற்றம் | Samugam Army Soldiers Sweet Sharing