ராணுவ ஹெலிகாப்டர் விபத்து - தீயை அணைக்க உதவி செய்த மக்களுக்கு கம்பளி வழங்கிய டிஜிபி
dgp
samugam-army-helicopter-crash
By Nandhini
ஹெலிகாப்டர் விபத்து நடந்த குன்னூர் பகுதியில் உள்ள மக்களுக்கு டிஜிபி சைலேந்திரபாபு, கம்பளி போர்வை வழங்கி பாராட்டுக்களை தெரிவித்திருக்கிறார்.
குன்னூரில் நேற்று முன்தினம் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் இந்தியாவின் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மற்றும் 11 வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்த சம்பவம் உலக நாடுகளையே பெரும் சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது. இந்நிலையில், இந்த விபத்து நடந்த இடத்தில், அப்பகுதியில் உள்ள மக்கள் மீட்புப்பணிகளுக்கு பேருதவியாக இருந்தனர்.
இதனையடுத்து, விபத்து நடந்த குன்னூர் பகுதியில் உள்ள மக்களுக்கு டிஜிபி சைலேந்திரபாபு, கம்பளி வழங்கி பாராட்டுக்களை தெரிவித்திருக்கிறார்.