வாய்க்காலில் திடீரென கவிழுந்த டிராக்டர் - நீரில் மூழ்கி 13 வயது சிறுவன் பரிதாப பலி
திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி, ஆளி வளத்தைச் சேர்ந்தவர் சதீஷ் பாபு. இவரது மகன் சதீஷ் (13). இவர் விடுமுறையின் காரணமாக தெற்கு பாமினியில் உள்ள தனது பாட்டியின் வீட்டிற்கு சென்றிருந்தார்.
அப்போது அருகில் இருந்த டிராக்டரை சதீஷ் என்பவர் ட்ராக்டர் ஓட்டிச் சென்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக நிலை தடுமாறி வாய்க்காலில் டிராக்டர் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த சம்பவத்தில் தண்ணீரில் மூழ்கி சதீஷ்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் சுமார் 2 மணி நேரத் தேடலுக்குப் பிறகு சிறுவனின் சடலத்தை மீட்டனர்.
இது குறித்து திருத்துறைப்பூண்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.