2 மூதாட்டிகளை கொலை செய்து கற்பழித்த கொடூர திருடன் - பகீர் பின்னணி என்ன? - அதிர்ச்சியூட்டும் சம்பவம்
2 மூதாட்டிகளை கொலை செய்து, கற்பழித்த கொடூர திருடனை போலீசார் கைது செய்துள்ளனர்.
விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம், கலித்திராம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் சரோஜா (80). இவருடைய மகள் பூங்காவனம் (58). இவர்கள் இருவரும் கடந்த 7ம் தேதி அதிகாலை வீட்டில் மர்மமான முறையில் அடித்துக் கொலை செய்யப்பட்டிருந்தனர். இவர்கள் அணிந்திருந்த நகைகள் திருடப்பட்டிருந்தது.
இது குறித்து கண்டமங்கலம் போலீசார் வழக்குப் பதிவு செய்து, 8 தனிப்படைகள் அமைத்து கொலை, கொள்ளை குற்றவாளிகளை வலைவீசி தேடி வந்தனர்.
இந்நிலையில், இந்த கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட விழுப்புரம் மாவட்டம், ஒட்டனந்தல் கிராமத்தைச் சேர்ந்த கவிதாஸ் (30) என்பவனை போலீசார் கைது செய்தனர்.
இது குறித்து விழுப்புரம் சரக டிஐஜி பாண்டியன் கூறியதாவது -
இந்த கொலை தொடர்பாக 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டு புலன் விசாரணை செய்யப்பட்டது. ஏற்கனவே இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபட்டவர்களின் பட்டியல் எடுத்து விசாரணை செய்தோம்.20 மணி நேரத்திற்குள்ளாகவே குற்றவாளியை நாங்கள் கைது செய்தோம்.
குற்றவாளி கவிதாஸ் இந்த கொலையை செய்ததாக ஒப்புக் கொண்டிருக்கிறான். மேலும், 2 மூதாட்டிகளை கொலை செய்துவிட்டு, பாலியல் பலாத்காரம் செய்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனையடுத்து, கடலூர் மாவட்டம் திருப்பாதிரிப்புலியூர் பகுதியில் கடந்த ஜனவரி 8ம் தேதி 2 பெண்களை அடித்து கொலை செய்ததையும் ஒப்புகொண்டுள்ளான்.
கைது செய்யப்பட்டுள்ள கவிதாசிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்ட 8 கிராம் நகையும் மீட்கப்பட்டிருக்கிறது. இவனுக்கு திருமணமாகி 6 மாதத்திலேயே மனைவி பிரிந்து சென்றுவிட்டார். இவன் வீட்டில் யாரும் இல்லாத பெண்களை குறிவைத்து கொள்ளை அடித்து கொலை செய்துவிட்டு பாலியல் பலாத்காரம் செய்யும் மனநிலை கொண்டவன்.
இவ்வாறு அவர் கூறினார்.