சாகசத்தில் ஈடுபட்ட இளைஞர்... - 30 அடி உயரத்திலிருந்து கீழே விழுந்து படுகாயம் - அதிர்ச்சி வீடியோ வைரல்

By Nandhini May 23, 2022 06:28 AM GMT
Report

கர்நாடக மாநிலம் சிக்கபாலயூர் பகுதியில் ஸ்ரீனிவாச சாகர அணை உள்ளது.

இந்த அணையின் சுவற்றில் இளைஞர் ஒருவர் ஏற முயற்சி செய்துள்ளார். அந்த இளைஞர் சுமார் 30 அடி உயரத்தில் ஏறிக்கொண்டிருக்கும்போது எதிர்பாராதவிதமாக கைத்தவறி தடுமாறி கீழே விழுந்தார். அவர் 30 அடி உயரத்திலிருந்து கீழே விழுந்ததால் பலத்த படுகாயமடைந்துள்ளார்.

இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் அந்த இளைஞரை மீட்டு உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இதனையடுத்து, போலீசார் அணைக்கு வருவோர் இது போன்ற செயல்களில் ஈடுபடக் கூடாது என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர்.