தொடர் கனமழை - பள்ளிகள், கல்லூரிகளுக்கு இன்றும் விடுமுறை
சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை மற்றும் வளிமண்டல சுழற்சி காரணமாக கடந்த 2 நாட்களாக கனமழை பெய்து வருகிறது.
சென்னையில் நேற்று முன்தினம் இரவு முதல் பெய்த கனமழையால் சாலை மழை நீர் சூழ்ந்துள்ளது. வீடுகளில் தண்ணீர் புகுந்துள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருநெல்வேலி, தென்காசி, மயிலாடுதுறை, விழுப்புரம்,மதுரை,சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது.
புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், இராமநாதபுரம், விருதுநகர், நாகப்பட்டினம் மற்றும் கடலூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது.